இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு விரைவில் ஏற்படக்கூடும் என ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச அளவிலான கொரோனா பாதிப்பு குறித்து ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மிகவும் வேகமாக பரவக்கூடிய ஒமிக்ரோன், மனித சமுதாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் மீண்டும் பாதிப்பை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெல்டா வைரஸ் பரவலால் உருவான இரண்டாவது அலையில் ஏப்ரல் மற்றும் ஜுன் மாதங்களுக்கு இடையில் 2 இலட்சத்து 40 ஆயரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்திய பொருளாதாரத்தை இரண்டாவது அலை சீர்குலைத்தது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் இந்திய மருத்துவமனைகள் அனைத்தும் முடங்கின. இதேபோன்ற பாதிப்பு விரைவில் நடக்கக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.