இந்தியாவில் யாரையும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
குறித்த பிரமாணப் பத்திரத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஒரு தனிநபரின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக தடுப்பூசி செலுத்துவது பரிந்துரைக்கப்படவில்லை.
கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்கள் நலன் கருதியே தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி அச்சு, ஊடகம், சமூக வலைதளம் என எல்லாவற்றிலுமே விளம்பரங்கள் செய்யப்படுகிறது. இதை செயல்படுத்தியே சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.