கிழக்கு லடாக் பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்தாலும், இந்தியா, சீனா இடையே கடந்த ஆண்டு 125 பில்லியன் டொலருக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீனாவில் இருந்து வெளியாகும் குளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் மேற்படி கூறப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையே 125.66 பில்லியன் டொலருக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 43 சதவீதம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஏற்றுமதி 97 பில்லியன் டொலராக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 46 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஏற்றுமதி 28 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 34 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவ பொருட்கள் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனாலேயே இந்தியா மற்றும் சீனா இடையிலான வர்த்தகம் 100 பில்லியன் டொலரை தாண்டியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது