போர்க்கால மனநிலையில் இருந்து உலக நாடுகள் வெளிவர வேண்டும் என சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளியல் கருத்தரங்கின் முதல்நாள் கூட்டத்திலேயே அவர் இந்த அழைப்பினை விடுத்தார்.
மோதல்போக்கு என்பது பேரழிவுதரும் பின் விளைவுகளையே உருவாக்கும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே அமைதியோடு ஒன்றிணைந்து வாழ வழிவகுப்பதும் இரு தரப்புக்கும் வெற்றிதரும் கொள்கையை கடைப்பிடிப்பதும் அவசியம் என்றும் ஜி ஜின்பிங் கூறினார்.
அதுவே மனிதகுல எதிர்காலத்துக்கு உகந்தது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.