நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
11 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் கிடைக்காத நியாயம் இதனை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்த விசாரணை இடம்பெறும் போதே அதில் சம்பந்தப்பட்டவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகின்றது என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
அதேபோல், புதிய அரசியலமைப்பு குறித்து பேசும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே, 20 ஆவது திருத்தம் மூலம் சர்வாதிகார ஆட்சியை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பை மாற்றி ஆட்சியாளர்களை உறுதிப்படுத்துவது அவசியமில்லை மாறாக அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.
எனவே இந்த மாற்றத்தை மக்களே மாற்றியமைக்க வேண்டும் என்றும் புதிய அரசியல் பயணமொன்றை உருவாக்கினாலேயே இளம் சமூகத்திற்கு நன்மை கிடைக்கும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.