மேற்கு கானாவில் சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டி மீது மோட்டார் சைக்கிள் மீது மோதி வெடித்ததில் குறைந்தது 17பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 59 பேர் காயமடைந்தனர்.
மேலும், 500 கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் துணை இயக்குநர் ஜெனரல் செஜி சாஜி அமெடோனு தெரிவித்தார்.
நேற்று (வியாழக்கிழமை) நாட்டின் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள போகோசோ மற்றும் பாவ்டி நகரங்களுக்கு இடையே உள்ள அபியேட்டில் இந்த வெடிப்பு ஏற்பட்டது.
இவ்விபத்து சுரங்கத்திலிருந்து 140 கிலோமீட்டர் (87 மைல்) தொலைவில் நடந்ததாக கின்ரோஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
கனடாவை தளமாகக் கொண்ட கின்ரோஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் சிரானோ தங்கச் சுரங்கத்திற்குச் சென்று கொண்டிருந்த வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக்கின் கீழ் மோட்டார் சைக்கிள் சென்றபோது, ட்ரக் வெடித்து சிதறியது.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அந்தப் பகுதியை விட்டு அருகிலுள்ள நகரங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.