புதிய கொரோனா கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது திருமண நிகழ்வையும் இரத்து செய்துள்ளார்.
தொற்றுநோயால் மிகவும் அழிவுகரமான தாக்கங்களை அனுபவித்த ஆயிரக்கணக்கான நியூசிலாந்து நாட்டவர்களை விட தான் வேறுபட்டவன் அல்ல என்றும் கூறியுள்ளார்.
கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அன்பானவருடன் இருக்க இயலாமை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும் ஜெசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டுள்ளார்.
ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை அடுத்து முழு நாடும் மிக கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
நியூசிலாந்தில் இதுவரை 15,104 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 52 இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.