கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு குளம் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக விசுவமடு இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கல்மடுகுளம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் இடுபட்ட 5 உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகள் ஐவரும் சட்டவிரோகமாக உழவுயிந்திரத்திற்கு மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 4 சந்தேக நபர்களும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களையும், உழவு இயந்திரங்களையும் தருமபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்