இலங்கையில் நாளாந்தம் 2 ஆயிரம் கொரோனா நோயாளிகள் பதிவாகுவதாகவும் உண்மையான தரவுகள் ஊடகங்களில் வௌியாகவில்லை என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது, பதிவாகும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் 2,000 கொரோனா நோயாளிகள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுவதாகவும் உண்மையான தரவுகள் ஊடகங்களில் வௌியாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் காரணமாக வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே இருந்த பல சிகிச்சை மையங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் நோயாளர்கள் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்தால், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.