குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி, சீனா தலைநகர் பீஜிங் வழியாக கொண்டு செல்லப்படுகின்றது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
30 நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பீஜிங் வந்தடைந்த ஒலிம்பிக் ஜோதி, முக்கிய நகர் வழியாக பயணிக்கவுள்ளது.
மலைப்பகுதிகள் வழியாகவும், சீனப் பெருஞ்சுவர் வழியாகவும் ஒலிம்பிக் ஜோதி பயணிக்கவுள்ளது.
குறிப்பாக, ரோபோவின் உதவியுடன், தண்ணீர் வழியாகவும் ஒலிம்பிக் ஜோதியை கொண்டு செல்லவுள்ளனர்.
இதையடுத்து, 4 ஆம் திகதி, BIRDS NEST விளையாட்டு அரங்கத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படவுள்ளது.
இதனிடையே, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சென்றவர்களும், போட்டி ஏற்பாட்டாளர்களும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 37 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பீஜிங் ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.