பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட 09 கைதிகளை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 சந்தேக நபர்களும் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் கைதிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.