கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
எனவே, கர்ப்பிணித் தாய்மார்கள் இயலுமானவரை விரைவாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்கள் மற்றும் அனாவசியமாக பயணங்களைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.