சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்ச சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணிக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி மறுப்பு வெளியிட்டது.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார்.
ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்களை உதவி செய்தார் என்றும் சமூகங்களுக்கு இகிடையில் அமைதியின்மையைத் தோற்றுவித்ததாகவும் தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டார்.