• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்கம் பராமுகமாக இருக்காது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் –  க.வி.விக்னேஸ்வரன்

shagan by shagan
2022/02/02
in இலங்கை
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கம் இனிமேலும் பராமுகமாக இருக்காது எமது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், எமது எல்லைக்குள் எல்லை தாண்டிய இந்திய இழுவைப்படகுகள் இவர்களது வாழ்வாதாரத்தை முற்றாக அழித்து வருகின்றன. எமது மீன் வளங்களை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையாகவே இவை அமைந்துள்ளன. முன்னர் இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்த இடங்களில் கடல் வளங்கள் பலவற்றையும் இல்லாமல் ஆக்கியவர்களே இப்போது இழுவைப் படகுகள் மூலம் எமது வளங்களையும் சூறையாடி வருகின்றார்கள்.

இவ்வாறு தொடர்ந்தால் அது எமது மீனவர்களையே வெகுவாகப் பாதிக்கும். ஆனால் இதே நேரத்தில் வன்முறையில் ஈடுபடுவோர் யார், எதற்காக அவ்வாறு ஈடுபடுகின்றார்கள் என்பதை நாம் ஆராய்ந்து அறிய வேண்டும். மூன்றாந் தரப்பாரின் உள்ளீடுகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதோ என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

எமது கடற்தொழிலாளர்களின் வலைகள், படகுகள் போன்ற உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு எம்மவர்களின் வாழ்வாதாரமே அழிக்கப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இவை போதாதென்று எம்மவர்களின் உயிரிழப்புக்களும் தாங்கொண்ணாத விதமாக அதிகரித்து வருகின்றன. நான் முதலமைச்சராக இருந்த போது டெல்லியிலிருந்து இங்கு வந்த உயர் அதிகாரியுடன் இது பற்றி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட போது நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்.

இந்தியா – இலங்கை மத்தியில் இருக்கும் கடலில் இழுவைப் படகுகள் பாவிக்கப்படக் கூடாது என்றும் அவை யாவும் வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடலில் சென்று பல நாட்கள் இருந்து மீன் பிடித்து வர ஆவன செய்ய வேண்டும் என்றும் ஆழ் கடலுக்குச் செல்லும் இழுவைப் படகுகள் அதற்கேற்றவாறு இரு அரசாங்கங்களினாலும் மாற்றி அமைக்க உதவப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம்.

ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எமது அரசாங்கம் இனிமேலும் பராமுகமாக இருக்காது எமது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு உறைக்கும் விதமாக ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எமது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல்: விரிவான விசாரணைக்கு பணிப்பு

Next Post

500 மில்லியன் டொலர் கடன் : இலங்கை – இந்தியாவிற்கு இடையில் இன்று ஒப்பந்தம்

Related Posts

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !
இலங்கை

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்
அம்பாறை

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

2026-01-27
Next Post
கடுமையான நிதி நெருக்கடி- இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரும் இலங்கை!

500 மில்லியன் டொலர் கடன் : இலங்கை - இந்தியாவிற்கு இடையில் இன்று ஒப்பந்தம்

அனுரவின் வாகனம் மீது முட்டைத் தாக்குதல் – பொலிஸில் ஜே.வி.பி. முறைப்பாடு!

அனுரவின் வாகனம் மீது முட்டைத் தாக்குதல் - பொலிஸில் ஜே.வி.பி. முறைப்பாடு!

கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட கழிவு நீர் விவகாரம் – பிரதேச செயலகத்தை மூடி ஆர்ப்பாட்டம்!

கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட கழிவு நீர் விவகாரம் - பிரதேச செயலகத்தை மூடி ஆர்ப்பாட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

0
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

0
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

0
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

0
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

2026-01-27
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

2026-01-27

Recent News

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.