தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பயணித்த வாகனம் மீது, முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜே.வி.பி. இன்று (புதன்கிழமை) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது.
கம்பஹா கலகெடிஹேன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பயணித்த வாகனம் மீது முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாகவே உரிய விசாரணை நடத்தி, சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு கோரி, இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.














