லித்துவேனியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை சீனா நிறுத்திவிட்டதாக, லித்துவேனியா முகமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி, பால் பொருட்கள், பியர் உள்ளிட்ட பொருட்களே இறக்குமதி இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சுங்கவரித்துறைக்கான பொது நிர்வாகம், ஆவணங்களின் குறைபாட்டைக் காரணம் காட்டி, தங்கள் நாட்டிலிருந்து அந்நாட்டுக்கு ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக, லித்துவேனியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லித்துவேனியா உணவு மற்றும் கால்நடை சேவை துறை இது குறித்து கூறுகையில், ‘எந்தவொரு தகவல் அல்லது தரவுகளோ இல்லை என, சீனாவிடமிருந்து எந்தவொரு அறிவிப்பாணையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை’ என தெரிவித்துள்ளது.
தாய்வான் அதன் தூதரகத்தை தங்கள் நாட்டில் திறந்துகொள்ள பால்டிக் நாடான லித்துவேனியா அனுமதித்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமது உறுப்பினர் நாட்டுக்கு எதிராக பாரபட்சமாக நடந்துகொள்வதாக சீனாவின் மீது குற்றம்சாட்டி ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்துள்ள வழக்கு வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்வானுக்கு மறைமுகமாக தனி நாடு அங்கீகாரம் அளிக்கும் வகையில், தாய்வானுக்கான பிரதிநிதித்துவ அலுவலகத்தை தங்கள் நாட்டில் திறக்க லிதுவேனியா அனுமதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கான தூதரக அந்தஸ்தை சீனா குறைத்தது.
லிதுவேனியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்ப அழைத்ததுடன், அந்த நாட்டின் தூதரையும் சீனா வெளியேற்றியது. இதன் காரணமாக இருநாட்டு உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தாய்வானை தனது நாட்டின் பிராந்தியம் என கருதும் சீனா, தாய்வானை தம்முடன் இணைக்கப் போவதாக கூறிவருகின்றது. ஆனால், தாங்கள் இறையாண்மை கொண்ட அரசாங்கம் என உறுதிபட தாய்வான் கூறியுள்ளது.