முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிக்குமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் மீது வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைத்து வந்தார்.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பு கூறவேண்டிய சிறிசேனவை அரசாங்கம் காப்பாற்றுகின்றதா என ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அத்தோடு ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு பேராயரும் முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.