ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன சமூகத்தில் மிக வேகமாக பரவி வருவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 48 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் தமக்கு எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற முடிவுகளை தாமாகவே எடுத்துக்கொள்கின்றனர் என்றும் அதனைவிடுத்து மருத்துவ உதவியை நாடுவதே சிறந்ததென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசி தொடர்பான கட்டுக்கதைகள் மற்றும் வதந்திகளை நம்பாமல் அனைவரும் விரைந்து பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.