மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் உரிய முறையில் கிடைக்காவிட்டால் இன்றும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்று மின்சாரத்திற்கான கேள்வி குறைவாக இருக்கும் என்பதனால் இரவு நேரத்தில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வியோகிப்பதில் தடை ஏற்படக்கூடும் எனவும் அச்சபை கூறியுள்ளது.
சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் எரிபொருளின்றி செயலிழந்த நிலையில் கொலன்னாவ, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையங்களின் இரண்டு மின்முனையங்களும், மத்துகம மற்றும் துல்ஹிரிய ஆகிய மின்னுற்பத்தி நிலையங்களும் செயலிழந்துள்ளன.
இதன் பின்னணியில் நேற்று 2 கட்டங்களாக நாடளாவிய ரீதியில் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
எனவே எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை பெறும் முறைமையொன்றை மின்சார சபை வகுக்க வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.