இன்று (சனிக்கிழமை) திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொண்டிருப்பதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என தெரிவித்துள்ளது.
தேசிய மின்கட்டமைப்பை ஸ்திரப்படுத்த பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதிகளில் அவ்வப்போது மின் தடை ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.