எங்களுக்கான பாதையை உருவாக்குதல், பெண்கள் குடும்பத்த தலைவர்களுக்கான மாறிச் செல்லும் வரைவிலக்கணங்களை உருவாக்குதல் என்னும் தொனிப்பொருளில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் அமைப்பின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற ஆய்வின் வெளியீட்டு நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) யாழில் இடம்பெற்றது.
விழுது அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மைத்திரேயி இராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம்,யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவர் சுரேந்திரகுமார்,யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் ,யாழ்ப்பாணம் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த அரச அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.