இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பதட்டங்களின் பின்னணியில் உலக சந்தையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொடர்ந்தும் தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எரிபொருள் விலையை திருத்துவது தொடர்பாக அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அத்தகைய திருத்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.