உத்தரப்பிரதேசத்தில் 4ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகிய வாக்கப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. 4ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
24 ஆயிரத்து 643 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 624 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேநேரம் 2.13 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.