வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கொட்டகை அமைத்து மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தின் ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று ( வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது காணாமல் போன தங்களின் உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மற்றும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு காணாமல் போனவர்களின் உறவுகளினால் அனுப்பிய கடிதம் தொடர்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில்,
“ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவைத் தவிர்த்தல்” என்ற நமது தொடரின் 5வது ஆண்டு நினைவு தினம் இன்று.
இந்த உலகத்தில், 5 ஆண்டுகளாக, 1833 நாட்களாக இந்தப் போராட்டத்தை நாம் மட்டும்தான் தொடர்கிறோம்.
மேலும் தமிழர் தாயகத்தில் நாங்கள் மட்டும் தான் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து தெரு வீதியில் கொட்டகை அமைத்து நடத்தி வருகிறோம் .
ஐசிசி மற்றும் பொதுவாக்கெடுப்பு ஆகிய இரண்டு விஷயங்களில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உலகுக்குக் காட்ட, எங்களைப் போல் இரவு பகலாக தெரு வீதியில் கொட்டகை அமைத்து போராடுவதற்கு, கிளிநொச்சி மற்றும் பிற இடங்களில் உள்ள மற்ற தாய்மார்களையும் ஊக்கிவிக்கிறோம் .
இந்த முக்கியமான நாளில், எங்களுக்கு உதவிய தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எமது தமிழ் மக்களின் உதவியின்றி நாம் இந்தப் போராட்டத்தை தொடர்ந்திருக்க முடியாது என்று தெரிவித்தனர்.