உக்ரைனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு, அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும் விரோதங்களை உடனடியாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடல் மூலம் நெருக்கடியைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினதும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தையும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.















