முதல் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்கொட்லாந்தில் அதிகமான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன.
மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள் இனி வகுப்பறையில் முகக் கவசங்களை அணிய வேண்டியதில்லை. ஆனால் அவர்களுக்கு பாடசாலை வெளிப்புற பகுதிகளில் முகக்கவசம் தேவைப்படும்.
அத்துடன், தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டத்தை செயற்படுத்த பெரிய இடங்களின் சட்ட தேவையும் முடிவுக்கு வருகிறது.
மேலும், தன்னார்வத் திட்டத்தை இயக்க விரும்பும் வணிகங்களுக்கு செயலி நேரலையில் இருக்கும்.
முகக்கவசம் அணிவது உட்பட ஸ்கொட்லாந்தில் மீதமுள்ள அனைத்து சட்டப்பூர்வ கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளும் மார்ச் 21ஆம் திகதி நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் நல்ல பொது சுகாதார நடத்தைகளை நம்பி, ஸ்கொட்லாந்து சட்டக் கட்டுப்பாடுகளிலிருந்து விலகிச் செல்லும் என்று முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.