பேக்கரி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
பேக்கரி உற்பத்திக்கு தேவையான கோதுமை மா, வெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் பாமொயில் போன்ற மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாகவே மூலப்பொருட்களை இறக்குமதி செய்யமுடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு பேக்கரி தொழிலை முன்னெடுத்துச் செல்வதே சவாலாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.