வேல்ஸில் நடைமுறையில் உள்ள மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டங்கள் எப்போது முடிவுக்கு வரலாம் என்பதற்கான திகதியை அமைச்சர்கள் வழங்குவது இதுவே முதல் முறை.
வேல்ஸ் மாத இறுதியில் தொடங்கி, இலவச வெகுஜன சோதனையை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவரும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கும் பிரித்தானியாவின் கடைசி நாடாக வேல்ஸ் இருக்கும்.
வேல்ஸ் அரசாங்கம், மக்கள் எவ்வாறு கொரோனா வைரஸுடன் பாதுகாப்பாக வாழலாம் என்பதை அமைக்கும் திட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடும்