விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவிற்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சராக செயற்பட முடியாது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கியதன் ஊடாக அரசாங்கம் பாரிய தவறை இழைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதவியினை இராஜினாமா செய்வதாக எந்தவொரு இடத்திலும் தெரிவித்திருக்கவில்லை.
எனினும், அமைச்சுகோ, அமைச்சரவை கூட்டத்திற்கோ செல்லப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியாயின் அமைச்சர்களுக்கான வரபிரசாதங்களை பெற்றுக்கொள்வீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய வாசுதேவ நாணயக்கார, பெற்றுகொள்ள மாட்டே எனவும் தெரிவித்திருந்தார்.