வீட்டுத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 700 வீடுகளில் நிரந்தமாக மக்கள் குடியேறாத நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சில நடைமுறை சிக்கல்கள் உட்பட வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்,
வீட்டுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் தங்களின் காணிகளில் குடியேற வேண்டும் என அதிகாரிகள் கூறுவதாகவும் வீடுகள் இல்லாத காணிகளில் எவ்வாறு தாம் குடியேறுவது என மக்கள் கேட்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வீட்டு திட்டங்கள் முன்னர் வழங்கப்பட்ட பலர் வீடுகளை தமது காணிகளில் கட்டிவிட்டு அவர்கள் வேறு இடங்களில் வசிக்கின்றனர் என்றும் குறித்த வீடுகளை தங்கள் “விடுமுறை விடுதியாக” பலர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் வீட்டு திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி போதாது என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்றும் தற்போதைய விலைவாசி அதிகரிப்பு இதற்கு காரணம் என்றும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.