இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10 ஆயிரத்து 688 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சமூக சுகாதார நிபுணர் விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தின் முதல் 9 வாரக்காலப்பகுதியில் 4 ஆயிரத்து 911 டெங்கு நோயாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
தற்போதைய நிலையில், 11 மாவட்டங்களில் 38 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.