அடுத்து வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு உரையாற்றிய அவர், “அடுத்து வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும். அது தொடர்பில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்.
கூட்டமைப்பு அரசியலில் நாம் தனித்துப் போட்டியிட்டு பின்னர் எமது கொள்கையை ஏற்றுக்கொள்ளும் தரப்புடன் கூட்டமைப்பாக இணைந்து கொள்ள முடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.