போலந்து எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைன் இராணுவ தளத்தின் மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல், நேட்டோவை அச்சுறுத்தும் முயற்சி என்று போலந்தின் துணை வெளியுறவு அமைச்சர் மார்சின் பிரசிடாக்ஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய இராணுவக் கூட்டணியின் உறுப்பினரான போலந்தின் எல்லையில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள யாவோரிவ் பயிற்சித் தளத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 35பேர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆத்திரமூட்டும் செயல் என்று பிரசிடாக்ஸ் கூறியுள்ளார்.
மேலும், ‘இந்த இராணுவத் தளம் போலந்து எல்லைக்கு மிக அருகாமையில் அமைந்திருந்தது அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும்’ என்று கூறினார்.