ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு 25 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் ஒத்திவைப்பது குறித்த அறிவித்தது என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்போகும் விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தற்போது கலந்துரையாடி வருகின்றனர்.
குறித்த கலந்துரையாடல் கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றுவருகின்றது.
இருப்பினும் ஒருசில காரணங்களினால் ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் உண்மைத்தன்மை குறித்து கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு ஆதவன் செய்திப்பிரிவு தொடர்புகளை மேற்கொண்டது.
இருப்பினும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் பங்காளி கட்சியினர் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் இந்த சந்திப்பு நடக்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.