இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 3.5 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பெற்றோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைக்கான விலை அதிகரிப்பை தொடர்ந்து, வெனிசுலா, ஈரான் ஆகிய நாடுகளிடம் இருந்து எண்ணெயை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.
அதேநேரம் தள்ளுபடி விலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை வழங்குவதாக கூறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில், 35 இலட்சம் பீப்பாய்கள் கொள்வனவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தங்கள் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.