எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் மற்றும் எரிவாயுவு கொள்வனவிற்காக நாடாளாவிய ரீதியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு பல இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமும் இடம்பெற்றுவரும் நிலையில் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன கூறினார்.
பொதுமக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் தமது பணிகளை சிரத்தையுடன் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அனைத்தையும் செய்துவருவதாக தெரிவித்தார்.
சில விடயங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்று கூறிய அமைச்சர், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு உட்பட பல விடயங்கள் தற்போதைய நிலைக்கு காரணம் என கூறினார்.