போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது சமீபத்திய புதுப்பிப்பில் கூறியுள்ளது.
கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ரஷ்யாவின் 509 டாங்கிகள், 1,556 கவச போர் வாகனங்கள் மற்றும் 252 பீரங்கி அமைப்புகளை அழித்துள்ளதாகவும் அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீதமுள்ள பட்டியலில், 80 ரொக்கெட் லொஞ்சர், 45 வான் பாதுகாப்பு உபகரணங்கள், 99 விமானம், 123 ஹெலிகொப்டர்கள், 1,000 வாகன உபகரணங்கள், 3 கப்பல்கள்- படகுகள், 70 எரிபொருள் தொட்டிகள், 35 ஆளில்லா விமானங்கள், 15 சிறப்பு உபகரணங்கள் ஆகியனவும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தனது துருப்புக்களின் இழப்பு பற்றிய புள்ளிவிபரத்தை ஒரு முறை மட்டுமே வழங்கியது. கடந்த மார்ச் 2ஆம் திகதி வரை 498 இறப்புகள் பதிவாகியதாக ரஷ்யா முன்பு கூறியிருந்தது.
ஆனால், அமெரிக்கா சமீபத்தில் சுமார் 7,000 ரஷ்ய துருப்புக்கள் மோதலில் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டிருந்தது.