இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டின்போது, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே பஷில் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியை அழைத்து விசாரிப்போம் என ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.
இதன்போது தடுமாறிய பஷில் ராஜபக்ஷ, “இல்லை, வரைவு நகல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை வழங்கமுடியாது. முழுமையான அறிக்கையையே வெளியிடமுடியும்.” என பதிலளித்திருந்தார்.