தங்காலை, கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டிருந்த 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் அதிகளவான போராட்டக்காரர்கள் தங்காலை நகரில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்தை நோக்கி பேரணியாக செல்ல முயற்சித்தனர்.
இதன்போது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்களை மேற்கொண்டபோதும் சிலர் கார்ல்டன் இல்லத்திற்குள் நுழைய முயற்சித்தனர்.
இதன்போது பொலிஸார் 12 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.















