அவசரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தை நீடித்துக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரும் நிலையில் அதற்கு ஆதரவளிப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகியோரும் ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
இவர்கள் அல்லாமல் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் இருக்கும் அதிகமான உறுப்பினர்கள் அவசரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என நம்புவதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி பக்கம் இருந்தாலும் அரசாங்கத்தின் தீர்மானங்கள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு தான் இனங்கப்போவதில்லை என்றும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.