அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிக்கவும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அவசரகாலச்சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் என்பன பிறப்பிக்கப்பட்டமை மற்றும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் இதனை தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை, தமது கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை வெளிக்காட்டுவதற்கான உரிமை என்பன மக்களின் அடிப்படை உரிமை என சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என தெரிவித்தார்.