போராட்டங்களின்போது அநாகரீகமாக நடந்துகொள்ளும் மற்றும் வன்முறையில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், தீ வைப்பு, சட்டவிரோதமாக பிரவேசித்தல் மற்றும் தவறான நடத்தை போன்ற சம்பவங்கள் பதிவாகி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களுக்கு உரிமை இருந்தாலும் அவர்கள் கட்டுக்கடங்காத வகையில் நடந்துகொள்ள முடியாது என்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட முடியாது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.