கிழக்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த, ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கிழக்கு நகரங்களான கார்கீவ், நிப்ரோவ், டொனெட்ஸ்-மகிவ்கா, ஷப்ரிஷிஷியா, மரியுபோல், லுஹன்ஸ், ஹர்லிவ்கா, கமின்ஸ்கி ஆகிய நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்து ரஷ்ய படையினர் பின்வாங்கி வருகின்ற நிலையில், இந்த செய்தி வெளிவந்துள்ளது.
இந்தநிலையில், உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த 18,300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், 147 விமானங்கள், 134 ஹெலிகொப்டர்கள், 647 டாங்கிகள், 7 படகுகள், 1,273 நான்கு சக்கர வாகனங்கள், 76 எரிபொருள் நிரப்பும் வாகனங்கள், 1,844 இராணுவ வீரர்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள், 4 மொபைல் ரொக்கெட் லொஞ்சிங் மெஷின், 92 ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.