இராணுவ ஆயுத தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கும் மற்றுமோர் பட்டியலை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ”ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை சார்த்திருப்பதை தவிர்க்கும் வகையில் உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் 1.75 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இராணுவத் துறையில் தற்சார்ப்பு நிலையை எட்டுவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது ஆகியவையே இந்த அரசின் முக்கிய நோக்கமாகும்.
உள்நாட்டில் தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும், உற்பத்தி நடந்து வருகிறது. அதேநேரத்தில் இதில் வெளிநாடுகளின் பங்களிப்பு, ஒத்துழைப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.