அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை இடம்பெற்றால் அவை ஜனநாயகத்தின் இரு தூண்கள் என உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அனைவரும் நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவசரகாலநிலை பிரகடனம் இரத்து செய்யப்பட்டமை சாதகமான நடவடிக்கை என்றும் ஐரோப்பிய ஒன்றிய ம் அறிக்கை ஒன்றின் ஊடக அறிவித்துள்ளது.
இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் தீர்க்கமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.