பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 332 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா முழுமையாக கைப்பற்றியுள்ளது.
போர்ட் எலிசெபத் மைதானத்தில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 453 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டீன் எல்கர் 70 ஓட்டங்களையும் டெம்பா பவுமா 67 ஓட்டங்களையும் கீகன் பீட்டர்சன் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், தைஜூல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளையும் காலீல் அஹமட் 3 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, முஷ்டபிசுர் ரஹ்மான் 51 ஓட்டங்களையும் டமீம் இக்பால் 47 ஓட்டங்களையும் யாசிர் ஷா 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து 236 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதனால், பங்களாதேஷ் அணிக்கு தென்னாபிரிக்கா அணி, 413 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சாரல் எர்வீ 41 ஓட்டங்களையும் வெர்னைன் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், தைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன் 2 விக்கெட்டுகளையும் காலீல் அஹமட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 413 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்தை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 80 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாபிரிக்கா அணி 332 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லிடொன் தாஸ் 27 ஓட்டங்களையும் மெயிடி ஹசன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கேசவ் மஹாராஜ் 7 விக்கெட்டுகளையும் சிம்ரொன் ஹார்மர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் தென்னாபிரிக்காவின் கேசவ் மஹாராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.