நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள 41 உறுப்பினர்களும் சபையில் தனித்தனியாக அமரவுள்ளனர்.
இந்த தீர்மானம் எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறித்த உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.
சுதந்திரக் கட்சியின் 13 உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிய 10 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுமே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
அத்தோடு சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களும் தனியாக அமரவுள்ளனர்.