இணைப்பு – 2 –
ரம்புகனையில் 15 மணி நேரமாக இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றதையடுத்து, ரம்புக்கனை பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
ரம்புக்கனை நகரில் வீதிகள் மற்றும் ரயில் மார்க்கத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க ரம்புக்கனை பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இதேவேளை ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, காயமடைந்த போராட்டக்காரர்கள் உள்ளிட்ட 24 பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவர்களில் 8 பேர் பொலிஸார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை இந்த போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வைக் கோரி இன்று அதிகாலை 1.30 மணி முதல், கண்டி – கொழும்பு ரயில் மார்க்கத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஏனையோர் ரம்புக்கனை – கேகாலை, குருநாகல் மற்றும் மாவனெல்ல வீதிகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், இன்று காலை முதல் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல ரயில் சேவைகளும் ரயில்வே அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்புக்கனையில் முன்னெடுக்கப்படும் போராட்டதில் பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
புகையிரத கடவையை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக மறித்து ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் ஏற்பட்ட பதட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.