உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உக்ரைனின் இராணுவ உற்பத்தி திறன்களை சிதைக்கும் மற்றும் அதன் தாக்கங்கள் உக்ரைனின் உயர்மட்ட ஆயுத வாடிக்கையாளரும் ரஷ்யாவின் முக்கிய கூட்டாளியுமான சீனாவின் மீதும் ஏற்படும் என பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ரஷ்யாவின் கடுமையான குண்டு வீச்சுக்குப் பிறகு, உக்ரைனின் வளங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது என டி வலரியோ பப்ரி என்பவர் ‘ஜியோபொலிட்டிக்ஸ்’ என்ற தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சீனா ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான வழிகளைத் தேடப் போகிறது அல்லது ஆயுதங்களின் பாகங்களை தானே தயாரிக்கலாம் என்ற நிலைப்பாட்டிற்கு அது செல்லலாம் என்று கூறப்படுகின்றது.
எனினும், அதற்காக குறிப்பிட்ட காலம் தேவைப்படுவதால் சீனாவின் ஆயுதக் கொள்வனவுச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் என்று குறித்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.
உக்ரைன் அதன் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்குகையில், ரஷ்யாவுடன் ஒத்துழைக்கவும் ஆதரவளிக்கவும் சீனாவின் விருப்பம் கொள்ளுமாக இருந்தால் நிலைமைகள் பாதகமாக அமையலாம் என குறித்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சீனாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில், சீனாவுக்கான உக்ரைனின் ஏற்றுமதி ஆண்டு தோறும் 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
2020இல், உக்ரைன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் 55ஆவது இடத்தையும், மொத்த ஏற்றுமதியின் அடிப்படையில் 46ஆவது இடத்தையும், வகிக்கின்றது.
அத்துடன், சீனாவிலிருந்து உக்ரைனுக்கான மொத்த இறக்குமதியின் அடிப்படையில் 47ஆவது இடத்தை கொண்டிருப்பதோடு, 2020 இல் பீஜிங்கிற்கு அனுப்பப்பட்ட முதல் மூன்று ஏற்றுமதிகளில் இரும்புத்தாது, தானியம் மற்றும் விதை எண்ணெய்கள், இருதரப்பு வர்த்தகத்தின் அடிப்படையில் மொத்தம் 7.26பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அத்துடன், சீனாவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய மற்றொரு முக்கிய பகுதி விவசாய வளங்களாகும். ஒன்பது மாதங்களுக்கு முன்பு, சீனாவிற்கு உக்ரேனிய கோதுமை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றின.
அத்துடன், சீனாவுக்கான தானிய ஏற்றுமதி இரண்டு முதல் மூன்று மடங்கு வரை விரிவடையும் என்று உக்ரைன் எதிர்பார்த்தது.
எவ்வாறாயினும், உக்ரைனில் நடைபெற்று வரும் போரானது, இருநாடுகளின் கூட்டாண்மையை எந்தளவில் இருக்கின்றது என்பதை தெளிவாக வெளிப்படுத்த முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுடனான தனது உறவை சீனா எவ்வாறு பேணுகிறது என்பது தான் உக்ரைனுடனான பீஜிங்கின் உறவுகளை தீர்மனிக்கப்போகின்றது.