ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணை அவசியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
போராட்டக்காரர்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு பொலஸார் மற்றும் படையினர் கட்டுப்பாட்டுடன் செயற்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும் நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டத்தரணிகள் தொடர்ந்தும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள் என அச்சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளது.
ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.